Home Jaffna News யாழில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவருக்கு கொரோனா

யாழில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவருக்கு கொரோனா

யாழ்.மாவட்டத்திலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வவுனியா சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதனடிப்படையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவருக்கு கொரோனா

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேருக்கும் மன்னாரில் இருவருக்கும் வவுனியாவில் ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 417 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.  8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற 5 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் எழுமாறாகப் பெறப்பட்ட சிலரிடம் மாதிரிகளில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவருக்கு கொரோனா

வவுனியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் அவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது”

என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழில் கலப்பட மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது
Next articleயாழில் வீடு புகுந்த கொள்ளை கும்பலின் சித்திரவதையில் குடும்பஸ்தர் சாவு