யாழ்ப்பாணம் மேலும் ஒருவர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு! – இன்றும் 6 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது . போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இவர்களில் யாழ்ப்பாணம் மாநகரைச் சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடம் இரண்டிலும் 470 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே 6 பேருக்குத் தொற் று கண்டறியப்பட்டது.
யாழ் மாநகரில் பருத்தித்துறை வீதியைச் சேர்ந்த 84 வயது பெண்ணொருவர் உயிரிழந்தார். உடற்கூற்றுப் பரிசோதனையின் போதே அவருக்குத் தொற் று உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் 7ஆவது நபர் கோவிட் தொற்றால் உயிரிழந்தார்.இதேவேளை, யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 3 பேருக்குத் தொற் று உறுதிப்படுத்தப்பட்டது.
சாவகச்சேரி பொதுச் சந்தையில் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் நாவற்குழியைச் சேர்ந்த ஒருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப் பட்டது.
இவர் சந்தைக்கு வருகை தந்த நிலையில் கண்டறியப்பட்டவர்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப் பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.