யாழில் தொலைபேசி யில் தொடர்ச்சியாக ஒன்லைன் விளையாட்டில் ஈடுபட்டுவந்த மாணவன் ஒருவன் தாயார் தொலைபேசி யினைப் பறித்தமையால் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
இந்தச் சம்பவம், சுழிபுரம் பிளவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 09இல் கல்விகற்கும் சிவனேஸ்வரன் நேருஜன் என்ற 15 வயதான மாணவனே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் தொலைபேசி யில் தொடர்ச்சியாக ஒன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்தமையினால் மாணவனின் தாயார் தொலைபேசியை பறித்து வைத்துள்ளார்.
அதனைப் பொறுக்க முடியாத மாணவன் நேற்று மதியம் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றதுடன், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக பப்ஜி கேமிற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிமையாக உள்ளனர்.
மேலும் இரவு, பகல் பாராமல் சாப்பிடாமல், தூங்காமல் இந்த கேம் விளையாடி வருகின்றனர்.இதனால் பெரும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது.
பப்ஜி கேம் விளையாடுவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக யார் அழைத்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது,
நண்பர்கள் போன் செய்தாலும் அதை எடுக்காமல் இருப்பது போன்ற அலட்சிய நிலை இந்த விளையாட்டால் ஏற்பட்டுள்ளது.
இதனால் உறவுகளிடையே பல சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கேம் விளையாடும் நபருக்கு படிப்பில் கவனக் குறைவு, மன உளைச்சல், மன அழுத்தம், கோபம், ஆக்ரோஷம்,
மற்றவர்கள் மேல் எரிச்சல் இப்படி நமக்கே தெரியாமல் ஏகப்பட்ட கெட்ட குணங்கள் நம்முள் இந்த விளையாட்டால் குடியேறி விடுகிறது.
இந்த பப்ஜி கேம் உங்கள் தூக்கத்தை கெடுத்து விடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இதனால் உங்கள் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.