யாழில் கடத்தப்பட்ட 20 வயது இளைஞன்! வெளியான பகீர் தகவல்

யாழில் கடத்தப்பட்ட 20 வயது இளைஞன்! வெளியான பகீர் தகவல்

யாழ்.பலாலி – அந்தோனிபுரம் பகுதியில், கஞ்சாவால் ஏற்பட்ட தகராறில் கடந்த 26ம் திகதி கடத்தப்பட்ட 20 வயதான இளைஞன் நேற்றய தினம் வீடு திரும்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த 26ம் திகதி பிற்பகல் 2 மணியளவல் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் மேற்படி இளைஞனை கடத்திச் சென்றதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடத்தலுடன் தொடர்புடைய 3 பேரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கடத்தப்பட்டதாக கூறப்படும் 20 வயதான இளைஞன் கஞ்சா தருவதாக கூறி 3 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிய பின்னர் ஏமாற்றியுள்ளான்.

யாழில் கடத்தப்பட்ட 20 வயது இளைஞன்! வெளியான பகீர் தகவல்

பின்னர் பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்த நிலையில் போலி கஞ்சாவை கொடுத்து ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் ஆத்திரமடைந்த தரப்பு குறித்த இளைஞனை கடத்தி 3 லட்சம் ரூபா பணத்தை பெற்ற பின் அவரை விடுவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..