Home Jaffna News யாழில் கஞ்சாவுடன் சிக்கிய 3 பேர்

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய 3 பேர்

சட்டவிரோதமான முறையில் கடத்திவரப்பட்ட 244 கிலோ கேரள கஞ்சாவுடன் வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் மேற்கொண்டிருந்த வழக்கமான கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கடத்தி வரப்பட்ட 244 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசுன்னாகத்தில் இளைஞன் மீது வாள் வெட்டு
Next articleசிறுமி ஹிசாலினி விவகாரம்! ரிசாட் குடும்பத்தினருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு