Home Jaffna News யாழில் இறந்த நிலையில் மாணவி மீட்பு !! வைத்தியசாலையில் வெளியான அதிர்ச்சி தகவல்

யாழில் இறந்த நிலையில் மாணவி மீட்பு !! வைத்தியசாலையில் வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவில் உயிரிழந்த நிலையில் பாடசாலை மாணவியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது அவர் இரண்டு மாத கர்ப்பமாக இருந்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

மாணவி திடீரென நோய்வாய்ப்பட்டார் என குறிப்பிட்டு, நேற்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மாணவியை குடும்பத்தினர் அனுமதித்தனர். எனினும் மாணவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது, உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

நேற்று குளித்து விட்டு வீட்டில் படுத்த போது முக்கினூடாக இரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் பருத்தித்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது

யாழில் இறந்த நிலையில் மாணவி மீட்பு !! வைத்தியசாலையில் வெளியான அதிர்ச்சி தகவல்

கரவெட்டி கிழக்கு, யார்க்கரு பகுதியை சேர்ந்த தனபாலசிங்கம் விஷ்ணுகா (19) என்ற மாணவியே உயிரிழந்திருந்தார்.

அவர் நெல்லியடி மத்திய கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவி. இம்முறை க.பொ.த உயிர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் மாணவி இரண்டு மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.

இதையடுத்து, மாணவி தற்கொலை செய்துகொண்டரா அல்லது வேறு நோய்வாய்ப்பட்டு இறந்தாரா என அறிய பருத்தித்துறை நீதிமன்றத்தில் நெல்லியடி பொலிசார் பி அறிக்கை தாக்கல் செய்தனர்.

யாழில் இறந்த நிலையில் மாணவி மீட்பு !! வைத்தியசாலையில் வெளியான அதிர்ச்சி தகவல்

இதையடுத்து, பிரேத பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleரவிதேஜாவின் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்திற்காக இத்தனை கோடி மதிப்பில் செட் அமைக்கப்பட்டுள்ளதா ?
Next articleஎப்போது தீரும் இந்த அவலம்? வெட்ட வெயிலில் பெற்றோல் வரிசையில் தூங்கும் குழந்தை