யாழில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்பு

யாழ் நகரில் இளைஞன் ஒருவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் மக்கள் வங்கிக் அருகிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாழில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்பு

இது கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் யாழ்ப்பாண காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்பு

இதேவேளை, யாழில் பல்கலைக்கழக மாணவி ஒருவரும் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவியே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது.

உயிரிழந்தவர் பளையைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவி எனவும் தெரியவந்துள்ளது.

உயிரிழப்புக்கான காரணம் இது வரை தெரியவராத நிலையில் யாழ்ப்பாண காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..