பயணக்கட்டுப்பாட்டு காலத்தில் அரைக்கதவில் இருந்த வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்த பொலிசார், யுவதியொருவரையும், வர்த்தக நிலைய உரிமையாளரையும் எச்சரித்து அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.
நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்போது, அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும்- அனுமதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகளை மீறிய பலர் அடிக்கடி சிக்குவது வழக்கம்.
அப்படியொரு சம்பவமே நெல்லியடியில் நடந்துள்ளது.
கடந்த 8ஆம் திகதி, நெல்லியடி பிரதேசத்தில் பொலிசார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது, அழகு சாதன விற்பனை நிலையமொன்றின் கதவி இலேசாக திறந்திருப்பதை அவதானித்துள்ளனர்.
இதையடுத்து சந்தேகமடைந்த பொலிசார், அங்கு சென்று இலேசாக திறந்திருந்த இழுவை கதவை மேல் நோக்கி திறந்து, உள்ளே அவதானித்துள்ளனர்.
கடை உரிமையாளரின் மகன் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்துள்ளார். அவரிடம் விசாரித்ததில் கடையை பார்க்க வந்ததாக குறிப்பிட்டுள்ளார். உள்ளே அவதானித்த போது, யுவதியொருவரை பொலிசார் கண்டனர். அவர் குறித்து விசாரித்து போது, அது தனது தங்கை என இளைஞன் குறிப்பிட்டார்.
இருவரது அடையாள அட்டைகளையும் பொலிசார் சோதனையிட்ட போது, இருவரும் உறவு முறையானவர்கள் இல்லையென்பது தெரிய வந்தது.
பொலிசார் துருவிதுருவி விசாரிக்க, யுவதி அழ ஆரம்பித்துள்ளார்.
இதையடுத்து, அவருக்கு அறிவுரை கூறி பொலிசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
வர்த்தக நிலைய உரிமையாளர் தரப்பு இளைஞனை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர், அவரும் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.