Home Accident News யாழிலிருந்து சென்ற புகையிரதம் தீப்பற்றியது.

யாழிலிருந்து சென்ற புகையிரதம் தீப்பற்றியது.

யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட புகையிரதம் வவுனியாவை அண்மித்த போது திடீரென தீ ஏற்பட்ட நிலையில் புகையிரத ஊழியர்கள் விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து இன்று (09.11) பிற்பகல் கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி புகையிரத நிலையம் வவுனியா, தாண்டிக்குளத்தை அண்மித்த போது புகையிரதத்தின் கொட்பொக்ஸ் பகுதியில் திடீரென தீ பிடித்துள்ளது.

இதனை அவதானித்த புகையிரத ஊழியர்கள் விரைந்து செயற்பட்டுத் தீயணைக்கும் பம்பியை செயற்படுத்தி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்து அதனை அணைந்தனர்.

இதனையடுத்து புகையிரதத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் சுமார் ஒரு மணித்தியால தாமத்தின் பின் குறித்த புகையிரதம் கொழும்பு நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபேராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் உயிரிழப்பு!
Next articleஇன்றைய ராசிபலன் – 10/11/2021, மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்