தம்பிலுவில் பெரிய முகத்துவாரம் பாலம் அருகே இடம்பெற்ற விபத்தொன்றில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் பெரியமுகத்துவாரம் பாலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகியதில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற 26 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.
திருக்கோவில் சின்னத்தோட்டம் 16 வது வீதியில் வசிக்கும் ஜெயச்சந்திரன் ஜெகன் எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
இவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .
உயிரிழந்தவரின் சடலம் இன்று தம்பிலுவில் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது .
விபத்து தொடர்பாக திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் .