மேஷம் – 2022-ம் ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
இந்த சுபகிருது ஆண்டின் சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலின் மூலம் நல்ல லாபமும், புதிய தொழிலில் ஈடுபட வாய்ப்பும் ஏற்படும்.
குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகளும் உதவிகளும் கிடைக்கும். பண வரவு சீராகவே தொடரும். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் சேர்வீர்கள். பழைய கடன்களையும் வசூலித்து விடுவீர்கள். முகத்தில் பொலிவும், தேகத்தில் மிடுக்கும் கூடும். பொது காரியங்களில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள்.
புனிதத் திருத்தலங்களுக்கு யாத்திரை சென்று வருவீர்கள். உற்றார் உறவினர்களிடமிருந்து அனுகூலமான தகவல்கள் வந்து சேரும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் என்று எதுவும் ஏற்படாத காலகட்டமிது என்றால் மிகையாகாது.
ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சமூகத்தில் பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். பொது காரியங்களில் ஈடுபட வாய்ப்புகளும் அதனால் புகழ், கெüரவம் ஆகியவைகளும் கூடும். மனதில் இருந்து வந்த அச்சம், பயம், சலனங்கள் விலகி தெளிவு உண்டாகும்.
செய்தொழிலில் இருந்த போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். நண்பர்களும் உற்றார் உறவினர்களும் தேடி வந்து உதவி செய்வார்கள். சிலர் வசிக்கும் வீட்டை புதுப்பிப்பார்கள். சிறிய தூரப் பயணங்களையும் செய்ய நேரிடும்.
திருமணமாகாதவர்களுக்கு, திருமணமும், குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியமும் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பெற்றோர்களுக்கும், உடன் பிறந்தோருக்கும் உதவி செய்து மகிழ்வீர்கள். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அனுகூலமான காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்யோகஸ்தர்களுக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உங்கள் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய ஊழியர்களை நம்பி மனதிலுள்ளதை வெளிப்படையாகப் பேசாதீர்கள். வெளியூர் தொடர்பான புதிய வேலை வாய்ப்புகளு க்காக முயற்சி எடுப்பீர்கள். வெற்றி நிச்சயம்.
வியாபாரிகள் எளிதில் முடிந்துவிடும் என எதிர்பார்த்த சில பணிகள் அலைச்சலுக்குப் பின்னரே சாதகமாகும். கூட்டாளிகளிடத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். இழுபறியாக இருந்து வந்த நீண்ட நாள் வசூல் தொடர்பானவைகளுக்குத் தக்க தீர்வு ஏற்படும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமடைவீர்கள்.
விவசாயிகளுக்கு அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். கூலித் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். விவசாய உபகரணங்களை பழுது நீக்கி சீர் செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். திட்டமிட்ட காரியம் ஆற்றுவதில் தைரியத்துடன் கட்சித் தொண்டர்களைக் கொண்டு முடிப்பீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். பொருளாதார உயர்வை பற்றிய சிந்தனைகள் மேம்படும். பெண்மணிகள் அனைவருடனும் கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும்,
பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். செலவுகளையும் தவிர்த்துப் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். முயற்சிகளை அதிகரித்து முன்னேறுவீர்கள்.
மாணவமணிகள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த சில முயற்சிகளைச் செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
பரிகாரம்:- துர்க்கை வழிபாடு உகந்தது.
மேஷம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், மேஷம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், மேஷம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், மேஷம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், மேஷம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், மேஷம் தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்