நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,009 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 9 ஆயிரத்து 296 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 2 இலட்சத்து 41 ஆயிரத்து 820 பேரில் 2633 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கொரோனா தொற்று உறுதியான 29 ஆயிரத்து 840 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
இதேவேளை, நாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 93 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 22 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 43 ஆயிரத்து 913ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த இரண்டாயிரத்து ஒன்பது பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக இரண்டு இலட்சத்து ஒன்பதாயிரத்து 296 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 704ஆகப் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், 31ஆயிரத்து 984 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 24இலட்சத்து 82 ஆயிரத்து 166 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை எட்டு இலட்சத்து 42 ஆயிரத்து 183பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது.