இராகலை நகரில் இயங்கும் உணவகம் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த யுவதி ஒருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (14) காலை 6.30 மணியலவில் இடம்பெற்றுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் ஒரு பிள்ளையின் தாயான இராகலை – ஹல்கரனோயா தோட்டத்தைச் சேர்ந்த பி.நித்தியபிரபா (வயது 35) என்ற யுவதியே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த யுவதி உணவகத்தின் மூன்றாவது மாடியில் தொழில் ஆரம்பித்த சில மணி நேரத்தில் ஜன்னல் வழியாக பாய்ந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் இராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
more news… visit here
Google News
ஏனைய தளங்களிற்கு செல்ல..
உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..