Home Health news மூட்டு வலியால் எந்த ஆஸ்பத்திரியிலும் சேர்க்காமலிருக்க ,இந்த உணவை வீட்டுல சேருங்க

மூட்டு வலியால் எந்த ஆஸ்பத்திரியிலும் சேர்க்காமலிருக்க ,இந்த உணவை வீட்டுல சேருங்க

மூட்டு வலியால் எந்த ஆஸ்பத்திரியிலும் சேர்க்காமலிருக்க ,இந்த உணவை வீட்டுல சேருங்க

இன்று மக்கள் சூரிய ஒளி படாமல் வீட்டுக்குள் அல்லது அலுவலகத்துக்குள் முடங்கி விடுவது அதிகரித்து வருகிறது.

பள்ளிகளிலும் பிள்ளைகள் திறந்த வெளியில் விளையாடுவது குறைந்துவருகிறது.

மூட்டு வலியால் எந்த ஆஸ்பத்திரியிலும் சேர்க்காமலிருக்க ,இந்த உணவை வீட்டுல சேருங்க

அப்படி வெளியில் செல்பவர்களும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்து கொள்ள சன்ஸ்க்ரீன் லோஷன்களை பயன்படுத்திவருகிறார்கள்.

இவை தேவையான அளவு சூரிய ஒளியை கிரகித்துகொள்வ தில்லை என்பதால் வைட்டமின் டி குறைபாடு அதிகரித்துவருகிறது.

உடலில் 20 நானோகிராமுக்கும் குறைவாக இருப்பதையே வைட்டமின் டி குறைபாடு என்கிறோம்

மூட்டு வலியால் எந்த ஆஸ்பத்திரியிலும் சேர்க்காமலிருக்க ,இந்த உணவை வீட்டுல சேருங்க

ஒவ்வொரு வைட்டமின் உடலுக்கு மிகவும் தேவையானது. மற்ற வைட்டமின்கள் உடலுக்குத் தேவையானதைப் போலவே, வைட்டமின் டி ஊட்டசத்தும் உடலுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

வைட்டமின் டி குறைபாடு காரணமாக எலும்புகள் பலவீனமடைதல், மூட்டு வலி, முதுகு வலி மற்றும் தசை வலி ஆகியவை ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

விட்டமின் டி சத்து மிகவும் குறைந்தால், கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர். எனவே, உடலில் வைட்டமின் டி குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள்

உடல் எப்போதும் சோர்வாக இருக்கும்

எலும்பு மற்றும் முதுகு வலி மூட்டு வலி

ஆறாத காயம்

மன அழுத்தம்

முடி உதிர்தல்

வைட்டமின் டி நிறைந்த உணவுகள்
மூட்டு வலியால் எந்த ஆஸ்பத்திரியிலும் சேர்க்காமலிருக்க ,இந்த உணவை வீட்டுல சேருங்க

முட்டை: முட்டைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றில் புரதம், வைட்டமின் டி, கால்சியம் மற்றும் பல வகையான தாதுக்கள் உள்ளன. வைட்டமின் டி குறைபாட்டை நீக்க, முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால், நல்ல பலனை பெறலாம்.

READ MORE >>>  மண்டைச்சளியை நீக்க மிளகு சித்த மருத்துவ முறை

பால்: குழந்தை பருவத்திலிருந்தே பால் மிகவும் முக்கிய உணவாக கருதப்படுகிறது. ஏனெனில் பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. வைட்டமின் டி குறைபாட்டைச் சமாளிக்க பால் உதவுகிறது.

மூட்டு வலியால் எந்த ஆஸ்பத்திரியிலும் சேர்க்காமலிருக்க ,இந்த உணவை வீட்டுல சேருங்க

கீரை: கீரையில் புரதம் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. இதை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள வைட்டமின் டி குறைபாட்டுடன் பல ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறையும் பூர்த்தி செய்யப்படுகிறது.

பன்னீர் : பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவாகும். இது எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்துகிறது. இதனை தொடர்ந்து உட்கொண்டால், பல நோய்களைத் தவிர்க்கலாம்.

மூட்டு வலியால் எந்த ஆஸ்பத்திரியிலும் சேர்க்காமலிருக்க ,இந்த உணவை வீட்டுல சேருங்க

சோயாபீன்: சோயாபீனில் புரதம், கால்சியம், வைட்டமின் டி, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், இரும்பு, வைட்டமின் பி, துத்தநாகம், ஃபோலேட், செலினியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இது எலும்புகளை வலுப்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கிறது.

காளான் : உணவு பொருள்களில் காளானில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. சூரிய ஒளியிலேயே வளரும் இந்த மஷ்ரூமில் வைட்டமின் பி1 பி2 பி5 சத்துகள், காப்பர் போன்றவை நிறைந்திருக்கிறது.

அடிக்கடி இதை க்ரேவியாகவோ, பிரியாணியில் சேர்த்தோ சமைத்து சாப்பிடலாம். சூரிய ஒளியினால் திறந்த வெளியில் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மஷ்ரூம்களில் மட்டுமே வைட்டமின் டி நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூட்டு வலியால் எந்த ஆஸ்பத்திரியிலும் சேர்க்காமலிருக்க ,இந்த உணவை வீட்டுல சேருங்க

சால்மன் மீன் : அசைவம் சாப்பிடுபவர்கள் மீன் உணவை அதிகம் விரும்புவார்கள். மீன் விரும்பும் பிரியர்கள் உணவில் அதிகப்படியாக சால்மன் மீன் சேர்த்துவருவது நல்லது.

வைட்டமின் டி, கால்சியம், செலினியம், பாஸ்பரஸ் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த மீன் இது. ஆய்வு ஒன்று கூறும்போது இந்த மீனை தொடர்ந்து சாப்பிடும் போது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதாக கூறுகிறது.
மற்ற மீன்களை காட்டிலும் இந்த மீனில் அதிகப்படியான வைட்டமின் டி இருக்கிறது என்பதால் அசைவம் உண்பவர்கள் இனி சால்மன் மீனை தேடி சாப்பிடுங்கள்.

READ MORE >>>  பெண்களுக்கு அதிக நன்மைதரும் பழம்.

மூட்டு வலியால் எந்த ஆஸ்பத்திரியிலும் சேர்க்காமலிருக்க ,இந்த உணவை வீட்டுல சேருங்க

ஆரஞ்சு பழச்சாறு : ஆரஞ்சு பழச்சாறு புளிப்பும், இனிப்பும் நிறைந்த இந்த ருசிக்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை என்பதால் இதை தினமும் எடுத்துகொள்ளலாம்.

தினமும் காலை உணவோடு ஒரு தம்ளர் ஆரஞ்சு பழச்சாறையும் எடுத்துகொள்ளுங்கள். இது வைட்டமின் மற்றும் கால்சியம் நிறைந்தது என்பதால் வளர்ந்த நாடுகள் இதை வலியுறுத்துகின்றன.

சிலருக்கு பால் குடித்தால் ஒவ்வாமை பிரச்சனை உண்டாகும் இதற்கு மாற்றாக வைட்டமின் டி மற்றும் வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழச்சாறு நாளுக்கு வேண்டிய சத்தை கொடுத்துவிடும்.

மூட்டு வலியால் எந்த ஆஸ்பத்திரியிலும் சேர்க்காமலிருக்க ,இந்த உணவை வீட்டுல சேருங்க

முட்டை : மீன் வாசனையே பிடிக்காதே என்றும் சிலர் சொல்வதுண்டு.
அவர்களுக்கு இந்த முட்டையின் மஞ் சள் கரு ஓரளவு பலனளிக்கவே செய்யும்.

முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளது. சூரிய ஒளி படாமல் ஹார்மோன் ஊசிகள் உதவியால் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளின் முட்டையில் இந்த வைட்டமின்களை எதிர்பார்க்கமுடியாது.

நாட்டு கோழிகள் வெயிலில் அலைந்து திரிந்து திறந்த வெளியில் வளரும் கோழிகளிடமிருந்து பெறும் முட்டைகளை எடுத்துகொள்வது நிச்சயம் பலனளிக்கும்.

மூட்டு வலியால் எந்த ஆஸ்பத்திரியிலும் சேர்க்காமலிருக்க ,இந்த உணவை வீட்டுல சேருங்க

ஓட்ஸ் : தானியங்கள் எப்போதுமே உடலுக்கு சத்துகளை அளிப்பவையே.
அந்த வகையில் ஓட்ஸ் உணவு வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட் கொண்டிருக்கும் உணவு. இது உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

வாரம் மூன்று நாள் காலை உணவாக ஓட் மீல் எடுத்துகொள்வது உங்களுக்கு கிடைக்க வேண்டிய வைட்டமின் டி அளவை ஓரளவு கொடுக்கும்.

மூட்டு வலி மூட்டு வலி மூட்டு வலி

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  The outbreak of monkeypox is a critical situation for public health. Detailed information on the virus is provided below.
Previous articleதலைமன்னாரில் எரிபொருள் நிலையத்தில் இரவோடு இரவாக திருட்டுத்தனமாக விற்பனை: முகாமையாளர் கைது!
Next articleஇனிப்பான உணவையே அதிகமா சாப்பிடுறவங்களுக்குத்தான் இந்த கசப்பான விஷயம்