Home Jaffna News முள்ளியவளையில் வாள்வெட்டு 7 பேர் மருத்துவமனையில்!

முள்ளியவளையில் வாள்வெட்டு 7 பேர் மருத்துவமனையில்!

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான வாள்வெட்டு சம்பவத்தின் போது காயமடைநந்த 7 பேர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

நேற்று 02.04.2022 மாலை வேளை இருபகுதி இளைஞர் குழுக்களுக்கிடையில் இந்தவாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்திற்கு இரு இளைஞர் களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு வாள்வெட்டில் முடிந்துள்ளது.

இந்த வாள்வெட்டு சம்பவத்தின் போது 4 ஆம் வட்டாரம் முள்ளியவளை பகுதியினை சேர்ந்த நான்கு பேர் வாள்வெட்டிற்கு இலக்காகியுள்ளதுடன் மேலும் காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் காயத்துடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கம் ஊடுருவப்பட்டது?
Next articleபதவி விலக தயாராகும் ராஜபக்ச குடும்பம் !?