Home Jaffna News முல்லைத்தீவு தாக்குதலுக்கு சுவிஸில் இருந்து பணம்! – ஆறு பேர் கைது

முல்லைத்தீவு தாக்குதலுக்கு சுவிஸில் இருந்து பணம்! – ஆறு பேர் கைது

முல்லைத்தீவு – செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதலை நடத்தியதுடன், கார் ஒன்றினை எரியூட்டிய சம்பவம் தொடர்பில் 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுவிஸில் இருந்து ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் பணம் அனுப்பி இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு செல்வபுரத்தில் வாள்வெட்டு வ்முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் யாழ்.நாவற்குழி பகுதியை சேர்ந்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவாலியைச் சேர்ந்த மூவரும் புத்தூரைச் சேர்ந்த மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆறுபேரும் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முற்படுத்தப்படவுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்!சடலத்தை புதைக்குமாறு பெற்றோரிடம் ஒப்படைப்பு
Next articleகொழும்பில் காருடன் மோதிய ரயில்! – இரு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி