முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றும் 900 ஊழியர்களுக்கு இதுவரை கோவிட்-19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலை பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நேற்று முன்தினம் தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலை ஏனைய பணியாளர்களுக்கும் இன்று கோவிட்-19 தடுப்பூசி ஏற்றப்பட்டது. இதன்படி இதுவரை மொத்தம் 900 ஆடைத்தொழில்சாலை பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே கோவி -19 தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட ஆடைத்தொழில்சாலை பணியாளர்களில் 20 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 16 பேர் மீள வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.