பூநகரி பிரதேச சபையின் உறுப்பினரும் முன்னாள் போராளியுமான ஜெயகாந்தன் இன்றைய தினம் அகால மரணமடைந்துள்ளார்.
போரின் போது முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் சக்கரநாற்காலியுடன் இதுவரை அவர் வாழ்ந்து வந்தார்.
தமிழீழ யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகி தனது சொந்த முயற்சியினால் கற்று அரசு தொழிலும் இணைந்து கொண்டார்.
மனிதநேய சிந்தனையாளராக அறியப்படும் இவர் பல்வேறான இடர் காலப்பகுதியிலும் பொதுமக்களுக்கு தன்னாலான உதவிகளை புரிந்ததோடு தனது சிறப்பான சேவையையும் இதுவரையில் ஆற்றி வந்துள்ளார்.
மேலும், இவரது மறைவுக்கு பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்