குளித்துக்கொண்டிருந்த 70 வயதான நபரை, முதலையொன்று தண்ணீருக்குள் இழுத்துச் செல்வதைப் பார்த்த 30 வயதுடைய பௌத்த பிக்கு ஒருவர் குளத்தில் குதித்து முதலையோடு சண்டையிட்டு வயதான நபரைக் காப்பாற்றிய சம்பவமொன்று அநுராதபுரத்தில் பதிவாகியுள்ளது.
அநுராதபுரம் – கஹடகஸ்டிகிலிய பிரதேசத்தில் உள்ள குளமொன்றில் கடந்த திங்கட்கிழமை (07) பிக்கு ஒருவரும், வயதான நபரும் குளித்துள்ளனர்.
பிக்கு சீக்கிரமாகவே குளித்து முடித்துவிட்டு குளத்திலிருந்து வெளியேறி விகாரைக்குச் செல்ல தயாராகிக்கொண்டிருந்தபோது, தன்னுடன் குளித்துக்கொண்டிருந்த வயதான நபரை குளத்தின் ஆழமானப் பகுதிக்கு முதலையொன்று இழுத்துச் செல்வதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
தன்னுயிரைப் பற்றி சிந்திக்காத பிக்கு உடனடியாகக் குளத்தில் குதித்து முதலையுடன் கடும் சண்டையிட்டு, அப்பெயரிவரைக் காப்பாற்றியுள்ளார். காயமடைந்த பெரியவர் அநுராதபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.