Home Local news முகக்கவசம் அணியச் சொன்ன பி.எச்.ஐ மீது தாக்குதல்

முகக்கவசம் அணியச் சொன்ன பி.எச்.ஐ மீது தாக்குதல்

வவுனியா சாந்தசோலைப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதாரபரிசோதகர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சுகாதாரபரிசோதகர் நேற்றயதினம் மாலை சாந்தசோலைப்பகுதியில் கடமை நிமித்தம் சென்றிருந்தார்.

இதன்போது முககவசத்தை சீரான முறையில் அணியாமல் வீதியால் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். இதன்போது அதனை சீராக அணியுமாறு சுகாதார பரிசோதகர் எச்சரித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த இளைஞர் சுகாதார பரிசோதகரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்து சுகாதார பரிசோதகர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட வரை வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

முகக்கவசம் அணியச் சொன்ன பி.எச்.ஐ மீது தாக்குதல் முகக்கவசம் அணியச் சொன்ன பி.எச்.ஐ மீது தாக்குதல் முகக்கவசம் அணியச் சொன்ன பி.எச்.ஐ மீது தாக்குதல்

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous article4 மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த அதிபர் கைது!
Next articleயாழில் டெலிவெறிக்கு கொண்டுசென்ற உணவினை பறித்து தின்ற பொலிசார்!! வைரலாகும் வீடியோ