மீனாவை விட அந்த விஷயத்துக்கு ரேவதி போதும் கமல் கூறிய உண்மை இதோ !!

சினிமா உலகில் படத்தின் கதை எல்லாம் எழுதிவிட்டு கதைக்கு ஏற்றபடியே நடிகர் நடிகைகளை தேர்வு செய்து ஷூட்டிங் எல்லாம் போன பிறகு திடீரென நடிகர் நடிகைகளை மாற்றுவது காலம் காலமாக இருந்து வருகிறது அப்படித்தான் கமல் படத்திற்கும் நடந்துள்ளது.

அந்த வகையில் 1992 ஆம் ஆண்டு கமல், சிவாஜி, வடிவேலு மற்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெற்றி கண்ட திரைப்படம் தேவர் மகன். இந்த படம் கமல் கேரியரில் ஒரு முக்கியமான படமாக அமைந்தது. இந்தப் படத்தின் கதை திரைக்கதையை கமல் எழுதி இருந்தாலும் படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் முதலில் கமல் மீனா ஆகியோர் கதாபாத்திரம் எடுக்கப்பட்டது கிராமத்து லுக் மீனாவுக்கு சுத்தமாக செட்டாகவில்லை. இதை அறிந்த படக்குழு உடனடியாக மீனாவை தூக்கி விட்டு பின் ரேவதியை கமிட் செய்தது. நடிகை ரேவதி கிராமத்து புடவையில் அச்சு அசல் அந்த கதாபாத்திரமாகவே மாறி கமலுடன் சூப்பராக நடித்தார்.

தேவர்மகன் படத்தின் ஒரு காட்சியில் கமல் திடீரென நடிகை ரேவதியை திருமணம் செய்து கொள்வார். அப்பொழுது இருந்ததால் நடிகை ரேவதியின் கதாபாத்திரம் ஆரம்பிக்கும். படத்தின் கதைக்கு ஏற்றபடி செம்ம சூப்பராக ரியாக்சன் கொடுப்பது, கமலுடன் இணைந்து நடித்த காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தது.

அது அந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றது. ஒரு கதாபாத்திரத்துக்கு நடிகை செட்டாக வேண்டும் என்றால் வேறு வழியின்றி படக்குழு அந்த நடிகையை தூக்கி தான் ஆக வேண்டும் அந்த வகையில் நடிகை மீனா திறமையானவராக இருந்தாலும் அந்த கதையின் கதாபாத்திரத்திற்கு செட் ஆகாமல் போனதால் ரேவதி அவருக்கு பதிலாக நடித்தார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..