Home Jaffna News மீண்டும் பேராபத்தில் யாழ்ப்பாணம்! மாவட்டத்தில் 99 பேர் உட்பட வடக்கில் 111 பேருக்கு கொரோனா தொற்று...

மீண்டும் பேராபத்தில் யாழ்ப்பாணம்! மாவட்டத்தில் 99 பேர் உட்பட வடக்கில் 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ்.மாவட்டத்தில் 99 பேர் உட்பட வடக்கில் 111 பேருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 53 பேர் உட்பட வடக்கில் 65 பேருக்கும்,

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 38 பேருக்கும்,

தம்பாட்டி கிராமத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 8 பேருக்குமாக யாழ்.மாவட்டத்தில் 99 பேர் உட்பட வடக்கில் 111 பேருக்கு தொற்று உறுதியானது.

கடந்த சில நாட்களில் குறைந்துவந்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை யாழ்.மாவட்டத்தில் மீண்டும் சடுதியாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ்.ஊர்காவற்றுறை தம்பாட்டியில் தொடரும் கொரோனா அபாயம்! மேலும் 14 பேருக்கு தொற்று உறுதி
Next articleஅலுவலக வாசலில் விபத்து…விழுந்து கிடந்த பணியாளர்; பார்த்துவிட்டு கடந்து சென்ற சுகாதார சேவை அலுவலர்: கிளிநொச்சியில் சம்பவம்