திருகோணமலை பொதுவைத்தியசாலையில் கடந்த சில தினங்களிற்கு முன்னர் சுவச விடுதி நோயாளி ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருந்தார்.
இதனை தொடர்ந்து குறித்த விடுதிக்கு பொறுப்பான வைத்திய நிபுணர் ஒருவரும் தொற்றுக்குள்ளாகியிருந்தார்.
இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுவதாக மேலும் தெரியவருகின்றது.
இந்நிலையில், வைத்தியசாலையில் பொரும்பாலான நோயாளிகள், ஊழியர்கள் கொரோனா அறிகுறிகளுடன் காணப்படுவதாகவும் அவர்களை இனம்காண போதிய வசதிகள் தற்சமயம் இல்லாது போயுள்ளதாகவும் தெரியவருகின்றது.
எனவே வைத்தியசாலை சமூகம் சார்ந்தவர்களும் நோயாளிகள் பார்வையாளர்கள் என அனைவரும் உரிய முறையில் முக கவசம் அணிந்து சுகாதாதர நடைமுறைகளை பேணுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.