அன்னை பூபதியின் 33வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏற்பாட்டில் இடம்பெற்றது.
அன்னை பூபதியின் நினைவு தமிழ்தேசிய கூட்டமைப்பு வழமைபோன்று இன்று (19) திங்கள் கிழமை காலை
6, 15, மணியளவில் மட்டக்களப்பில் நாவலடி அன்னைபூபதி நினைவு வளாகத்தில் உள்ள கல்லறையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.ஶ்ரீநேசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான்,
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மா.நடராசா, ஏறாவூர் பற்று பிரதேசசபை தவிசாளர் சர்வானந்தா மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு 33,சுமர்களை ஏற்றி நினைவு அஞ்சலி செலுத்தி அகவணக்கம் செலுத்தினர்.
கூட்டமைப்பினரின் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதை தொடர்ந்து, தற்போது அந்த பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அன்னைபூபதி அவர்கள் கடந்த 1988,ம் ஆண்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர ஆலயத்தில் இந்திய அமைதிப்படை நிலைகொண்டிருந்த வேளையில்
இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து முப்பது தினங்கள் உண்ணாவிரதம் இருந்து ஏப்ரல் 19ஆம் திகதி உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் குறித்த நிகழ்வு நிறைவடைந்து நிகழ்வுக்கு வந்தவர்கள் சென்றபிற்பாடு, காத்தான்குடி பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவுடன் அப்பகுதிக்கு வருகைதந்தனர்.
எனினும் நிகழ்வு நிறைவடைந்து அங்குவந்தவர்கள் சென்றதன் காரணமாக பொலிஸார் அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.