Home Tamil News மின்வெட்டு நேரம் தொடர்பான அறிவிப்பு

மின்வெட்டு நேரம் தொடர்பான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான காலம் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வலயங்களின் அடிப்படையில் மூன்று மணித்தியாலமும் 20 நிமிடமும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ‘ஏ’ முதல் ‘எல்’ வரையான வலயங்களிலும், ‘பி’ முதல் ‘டபிள்யூ’ வரையான வலயங்களிலும் காலை 09 மணி முதல் மாலை 05.30 வரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 05.30 முதல் இரவு 09.30 வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், ‘எம்’, ‘என்’, ‘ஓ’ ‘எக்ஸ்’, ‘வை’ மற்றும் ‘இஸற்’ ஆகிய முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 05 மணி முதல் காலை 08 மணி வரையான காலப்பகுதிக்குள் 3 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், கொழும்பு வர்த்தக வலயத்திற்கு உட்பட்ட பகுதியில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் 3 மணி நேரம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் கோட்டாபய விடுத்துள்ள அழைப்பு
Next articleAK 61 பட ஷூட்டிங் பற்றி வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதோ !!