Home Indian news மின்சார ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை

மின்சார ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் அம்பேத்கர் நகர் பகுதியில் சேர்ந்தவர் மாரிமுத்து. கூலி தொழிலாளியான இவருக்கு நிரோஷா (20) என்கிற மகள் உள்ளார்.

இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நாள்தோறும் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து கல்லூரிக்கு மின்சார ரயிலில் வழக்கமாக சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை கல்லூரிக்கு செல்வதற்காக சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்திற்கு வந்த நிரோஷா.. என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. திடீரென சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீசார் நிரோஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நிரோஷாவின் பையில் தற்கொலைக்கான கடிதம் இருந்ததாக கூறப்படும் நிலையில் அதனை கைப்பற்றிய ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  மக்களைப் பிரிப்பது எளிது, ஆனால் காலம் ஒற்றுமையைக் கோருகிறது: ஏ.ஆர்.ரஹ்மான்
READ MORE >>>  சீதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணவத்
Previous articleவீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞனிற்கு நேர்ந்த கதி!!
Next articleகொழும்பில் பதற்றம்! இரவோடு இரவாக அடித்து துரத்தப்படும் போராட்டக்காரர்கள்