Home Astrology மிதுனம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022

மிதுனம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022

மிதுனம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022

இந்த சுபகிருது வருடத்தில் சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உடல், மன உபாதைகள் மறைந்து தெளிவுடனும், சுறுசுறுப்புடனும் பணியாற்றத் தொடங்குவீர்கள். புதிய இடங்களுக்கும் செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அடிக்கடி பிரயாணங்கள் செய்ய நேரிடும்.

குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையத் தொடங்கும். வருமானம் படிப்படியாக உயரும். குழந்தைகளும் உங்கள் சொல்லுக்கு செவிசாய்ப்பார்கள்.

புதிய தொழில் நுட்பங்களையும் கற்றுக்கொள்வீர்கள். உடன் பிறந்தோர் விட்டுக் கொடுத்து அனுசரித்து நடந்து கொள்வார்கள். போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டா வது காப்பாற்றி விடுவீர்கள்.

மிதுனம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022

பழைய காலத்தில் தொலைந்துபோன பொருள்கள் அதிர்ஷ்டவசமாக திரும்ப கைவந்து சேரும். உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு தவிர்க்க முடியாத சில நிர்பந்தங்களுக்காகச் செலவு செய்ய நேரிடும்.

இந்த ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்பினால் சில புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.

நெடுநாளாக வராமல் இருந்த உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அசையாச் சொத்துகள் விஷயத்தில் இருந்த வில்லங்கள் நீங்கி வருமானம் வரத் தொடங்கும்.

உடல் ஆரோக்கியமும் மனவளமும் உயர்வாகவே இருக்கும். யோகா, தியானம், பிராணாயாமம் போன்றவைகளையும் கற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்த பிணக்குகள் யாவும் மறைந்து இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.

அரசாங்க ஊழியர்கள் உங்கள் கோரிக்கைக்கு செவிசாய்ப்பார்கள். சிலர் புதிய வீடுகட்டி கிரகப்பிரவேசம் செய்வார்கள். சிலருக்கு வசிக்கும் வீட்டைப் புதுப்பிக்கும் யோகமும் உண்டாகும். சீரான வருமானத்தால் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள்.

புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். வழக்குகளிலும் எதிர்பார்த்த அனுகூலமான திருப்பங்கள் கிடைக்கும். சுணங்கி வந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். குடும்பத்தில் மழலை பாக்கியமும் கிடைக்கக் கூடிய காலகட்டமாக இது அமைகிறது.

உத்யோகஸ்தர்கள் உயர் பதவிகளில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதை உறுத்திய சில பிரச்னைகள் மறையும். சக ஊழியர்களிடையே ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரிகள் நுணுக்கமான சில விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள்.

எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவி கிடைக்கும். லாபகரமான வாய்ப்புகள் வியாபார பணிகளில் அமையும். விவசாயிகளுக்கு நெருக்கமானவர்களின் மூலம் சில அனுகூலமான பலன்கள் ஏற்படும். மனதில் இருந்து வந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவு பெறுவீர்கள். அரசு தொடர்பான அனுகூலம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென்று முடியும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.

மிதுனம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022

கலைத்துறையினர் எந்தவொரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் எண்ணிய முடிவு கிடைக்கும். பழைய கலைஞர்களின் சந்திப்பு மனதிற்கு
சந்தோஷத்தை ஏற்படுத்தும்.

பெண்மணிகளுக்கு உடலாரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். புதிய பொருள்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு சக மாணாக்கர்களிடையே நிலவிய கருத்துவேறுபாடுகள் தீர்ந்துவிடும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு சென்று படிப்பைத் தொடரும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம்
உண்டாகும்.

பரிகாரம்:- சனிபகவானை வழிபட்டு வரவும்.

மிதுனம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், மிதுனம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், மிதுனம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் மிதுனம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், மிதுனம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், மிதுனம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleரிஷபம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022
Next articleகடகம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022