கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம் கே.ஜி.எஃப் 2. மேலும் ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ரவீனா டண்டன், சஞ்சய் தத் பலர் நடித்துள்ளார்கள்.
இதன் முதல் பாகத்திற்கு கிடைத்த பிரம்மனாட வெற்றியால் இரண்டாம் பாகத்திற்கு இந்திய முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உமர் சந்து என்பவர் கே.ஜி.எஃப் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். இவர் இங்கிலாந்து மற்றும் துபாய் நாட்டின் சென்சார் போர்டு உறுப்பினராக உள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: “கே.ஜி.எஃப் 2 திரைப்படம் கன்னட திரையுலகுக்கு மகுடம் சூடும் படமாக இருக்கும். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை அதிரடி ஆக்ஷன் காட்சிகள், சஸ்பென்ஸ் மற்றும் திரில் நிறைந்ததாக உள்ளது. வசனங்கள் அனைத்தும் வலிமையாக உள்ளது. பாடல்கள் ஓகே ரகம் தான், ஆனால் பின்னணி இசை வேறலெவலில் இருக்கிறது.
படம் பிரமாதமாக உள்ளது. இறுதி வரை படத்தின் தீவிரத்தை இயக்குனர் உணர வைத்துள்ள விதம் சிறப்பு. அனைவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். கே.ஜி.எஃப் 2 உலகத்தரம் மிக்க படம். படத்தின் நாயகன் யாஷ் மற்றும் வில்லன் சஞ்சய் தத் திறம்பட நடித்திருக்கிறார்கள். கிளைமாக்ஸ் உங்களை அதிர்ச்சியடைய வைக்கும்” என தெரிவித்துள்ள அவர், இப்படத்துக்கு 5 ஸ்டார்களையும் கொடுத்துள்ளார்.