Home Tamil News மாவீரர்தினத்தில் புலிகளை விட்டுவிட்டு மக்களிற்கு அஞ்சலி செலுத்துங்கள்: முல்லைத்தீவு பொலிசார் ஆலோசனை!

மாவீரர்தினத்தில் புலிகளை விட்டுவிட்டு மக்களிற்கு அஞ்சலி செலுத்துங்கள்: முல்லைத்தீவு பொலிசார் ஆலோசனை!

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளிற்கு அஞ்சலி செலுத்தாமல், யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களிற்கு அஞ்சலி செலுத்துங்கள் என முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மாவீரர் தின ஏற்பாடுகளில் ஈடுபடுவார்கள் என பொலிசார் கருதும் பிரதேச பிரமுகர்களை நேற்று பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து இதனை தெரிவித்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட தலைவி ஈஸ்வரி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் து.ரவிகரன், பீற்றர் இளஞ்செழியன், முல்லைத்தீவு வர்த்தகர் சங்க தலைவர் கௌரிராசா, செயற்பாட்டாளர்கள் பே.ஜெபநேசனி, சிவநேசராசா ஆகியோர் நேற்று பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, மேற்படி தகவலை தெரிவித்தனர்.

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளின் கொடி, சின்னம் மற்றும் அடையாளங்களை பயன்படுத்தக்கூடாது என பொலிசார் தெரிவித்தனர்.

அவ்வாறு செயற்பட்டால் தாம் சட்டநடவடிக்கையெடுப்போம் என்றும், ஆனால் யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களிற்கு அஞ்சலி செலுத்துவதற்கு தடையில்லையென்றும் தெரிவித்தனர்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous article51 வயது காதலனை ஏமாற்றி 85 இலட்சம் ரூபா மோசடி செய்த 25 வயது கிளிநொச்சி யுவதி கைது
Next article31 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மென்பொருள் பொறியியலாளர் கைது!