தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாறன் பெரிதளவில் வெற்றிபெறவில்லை. இப்படத்தை தொடர்ந்து திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய படங்களில் தனுஷ் நடித்து முடித்துள்ளார்.
இதுமட்டுமின்றி ஹாலிவுட்டில் உருவாகி வரும் தி கிரே மேன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் தனுஷின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகர் தனுஷின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 180 இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். கடந்த 20 ஆண்டு திரைவாழ்க்கையில் நடிகர் தனுஷ் 180 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.