இந்திய மத்திய பிரதேச மாநிலத்தில் புதிதாக திருமணமான மணப்பெண் முதலிரவின் போது வீட்டின் மொட்டை மாடி வழியாக எகிறி குதித்து தப்பி சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கோர்மி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சோனு ஜெயின் இவர் திருமணம் ஆகாமல் பெண் பார்த்து வந்தார். பல ஆண்டுகளாக திருமணம் ஆகாத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உதால் ஹாதிக் என்பவருடன் சோனுவிற்கு பழக்கம் ஏற்பட்டது.
அப்பொழுது சோனுவிடம் ஹாத்திக் தனக்கு தெரிந்த பெண் ஒன்று உள்ளதாகவும், அந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தால் தனக்கு 1 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும் பேசியுள்ளா். இறுதியாக அவர் ரூ90 ஆயிரத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஹாத்திக் கோர்மி கிராமத்திற்கு அனிதா ரத்னகுமார் என்ற பெண் மற்றம் அவருடன், ஜிஜேந்திர ரத்னகுமார், அருண் அகிய மூவரை அழைத்து வந்து சோனுவிற்கு அறிமுகம் செய்து வைத்தார் அனிதா ரத்னகுமாரை சோனு திருமணம் செய்ய முடிவு செய்து ஏற்பாடுகள் நடந்து சோனு குடும்பத்தினர் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடந்தது.
திருமணமான இரவு அனைவரும் உறங்கச் சென்றுள்ளனர். இரவு சோனுவுக்கும், அனிதாவிற்கும் முதலிரவு ஏற்பாடுகள் நடந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் வீட்டின் மாடிக்கு சென்ற அனிதா வீட்டின் மாடியிலிருந்து எகிறி குதித்து மாப்பிள்ளை வீட்டிலிருந்து தப்பி சென்றுவிட்டார். ஹார்த்திக், ஜிஜேந்தர், அருண் ஆகிய மூன்று பேரும் தப்பி சென்றுவிட்டன்ர்.
வீட்டில் அனிதாவை உறுவினர்கள் தேடியபோது காணவில்லை என்பதால் குடும்பமே அதிர்ச்சியடைந்தது. அப்பொழுது இரவு ரோந்து பணியில் இருந்த பொலிஸாரிடம் அனிதா சிக்கியுள்ளார்.
அவரை பபொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்த போது தான், சோனுவிடமிருந்த ரூ90 ஆயிரத்தை ஏமாற்றி வாங்கவே இந்த கல்யாண நாடகத்தை திட்டமிட்டு நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து சோனு இது குறித்து புகார் அளித்ததன் பேரில் பொலிஸார் அனிதா உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமே ஆகாமல் இருந்தவரின் அறியாமையை பயன்படுத்தி ஒரு கும்பல் அவரிடம் பணம் பறிக்கும் நோக்கில் அவரிடமிருந்த ரூ90 ஆயிரத்தை ஏமாற்றி போலி கல்யாணத்தையும் நடத்திய சம்பவம் வைரலாக பரவி வருகிறது.