Home Ampara news மாநகரசபை பெண் உறுப்பினரின் மகளின் நிர்வாணப் படங்கள் பேஸ்புக்கில்!! மட்டு’வில் காதலனுக்கு விளக்கமறியல்!!

மாநகரசபை பெண் உறுப்பினரின் மகளின் நிர்வாணப் படங்கள் பேஸ்புக்கில்!! மட்டு’வில் காதலனுக்கு விளக்கமறியல்!!

பாடசாலை மாணவியின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டில் கைதான காதலர் எனக் கூறப்படும் சந்தேகநபரை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை – கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவுக்கு கடந்த புதன்கிழமை (22) நற்பிட்டிமுனை பகுதியைச் சேர்ந்த தனது மகளின் அந்தரங்க புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, கல்முனை மாநகர சபை பெண் உறுப்பினர் முறைப்பாடு வழங்கினார்.

இதற்கமைய செயற்பட்ட பொலிஸார், குறித்த பாடசாலை மாணவியை காதலிப்பதாக சந்தேகிக்கப்பட்ட திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க சந்தேகநபரை மாணவியின் ஒத்துழைப்புடன் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணையின் பின்னர் கைது செய்தனர்.

இதன்போது 2 வருடங்களாக காதலிப்பதாக ஏமாற்றி, அவ்விளைஞன் அக்கால கட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் குறித்த மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதுடன், அதனை காணோளியாக தனது கைத்தொலைபேசியில் சேமித்து வைத்துள்ளார்.

பின்னர் 2 வருடங்களாக தொடர்ந்த காதல் பின்னர் இடைநடுவில் மாணவியின் பெற்றோர் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. இதனால் இளைஞன் விரக்தியுற்று, மாணவியின் பெற்றொருக்கு பல்வேறு அழுத்தங்களை தொலைபேசி ஊடாக அழுத்தங்களை வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் திடிரென சமூக வலைத்தளங்களில் அம்மாணவியுடன் காதல் தொடர்பில் இருந்த காலங்களில் எடுக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோக காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகின.

இதனை அடுத்து அம்மாணவியின் தாயார், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய இளைஞனை பொலிஸார் கைது செய்து நேற்று வியாழக்கிழமை (23) கல்முனை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது, எதிர்வரும் மார்ச் மாதம் 8 திகதி வரை 14 நாட்கள் இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்றைய ராசிபலன் – 25/02/2023, கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next articleநிலாவரையில் புத்தர் சிலை அமைப்பு; எதிர்ப்பினால் அகற்றம்