17 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெரணியகல பொலிசாரால் கைதானவர், அவிசாவளை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, 200,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாணவியும், தாயாரும் இம்மாதம் 5ஆம் திகதி தெரணியகல பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
பிரத்தியேக வகுப்பிற்காக அதிபரின் வீட்டுக்கு சென்ற தன்னை, அதிபர் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியதாக மாணவி வாக்குமூலமளித்திருந்தார்.
இதையடுத்தே, 50 வயதான அதிபர் கைதானார்.