Home மட்டக்களப்பு செய்திகள் மாணவிகளை வீதிகளில் தொந்தரவு செய்பவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் களத்தில்

மாணவிகளை வீதிகளில் தொந்தரவு செய்பவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் களத்தில்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு, வீதிகளில் தொந்தரவு செய்பவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ். அப்துல் மஜீட் (14) தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, அக்கரைப்பற்று ஆகிய பிரதேச பாடசாலைகளில் குறிப்பாக, பெண் பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைகள், பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பமாகும் மற்றும் முடிவடையும் நேரங்களில், இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் மாணவிகளுக்குப் பின்னால் கூட்டமாகச் சென்று தொந்தரவு செய்வதோடு, தொலைபேசியில் புகைப்படம் எடுப்பதாகவும் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனால் மாணவிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதோடு, சில மாணவிகள் இடைநடுவில் கல்வியை கைவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டபட்டுள்ளது.

குறித்த பெண் பாடசாலைகள் அமையப் பெற்றுள்ள பிரதேசங்களில், உள் வீதிகளில், பாடசாலை ஆரம்பிக்கும் முடியும் நேரங்களில் விசேட போக்குவரத்து பொலிஸாரை சிவில் உடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாவும் கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக நீதிமன்றினுாடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleநான்கு இளைஞர்களால் சிறுமி துஷ்பிரயோகம்!! கைதானவர்கள் நிரபராதி என உறவுகள் ஆர்ப்பாட்டம்
Next articleஇன்றைய ராசிபலன் – 17/02/2023, மீன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்…