முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு இருட்டுமடு கிராமத்தில் மா மரத்தில் மாங்காய் பறிக்க ஏறிய குடும்பஸ்தர் தவறுதலாக விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வெள்ளையன் சண்முக நாதன் என்ற 51 அகவையுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 10.06.21 அன்று இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு பிரோத பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் பரிசோதனையின் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுளளது.
இவரின் இறுதி நிகழ்வு 13.06.21 இன்று நடைபெற்றுள்ளது