மட்டுப்படுத்தப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவர்த்து சேவைகள் எதிர்வரும் புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியாவசிய தேவைகளுக்கு பயணிப்பவர்களுக்காக இவ்வாறு பொதுப் போக்குவர்த்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டியில் வைத்து போக்குவரத்து மற்றும் சமுதாய பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புகையிரத சேவைகளும் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.