தமிழ் சினிமாவில் துருவங்கள் 16 என்ற படத்தை இயக்கத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் கார்த்திக் நரேன். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அருண் விஜயை வைத்து மாஃபியா என்ற படத்தை இயக்கியிருந்தார்.
இந்த படத்திற்கு ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் வெளியான பிறகு ரசிகர்கள் படத்தை கழுவி ஊற்றினார்கள். இதனை கண்டுகொள்ளாத கார்த்திக் நரேன் தனது அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்ய தொடங்கிவிட்டார்.
அந்த கதையை தனுஷிடம் கூற அவருக்கும் ஓகே சொல்லிவிட்டார், அதுதான் மாறன் படம். இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த படத்தை தனுஷ் ரசிகர்களே பிடிக்கவில்லை என்று கூறினார்கள்.
இதனையடுத்து கார்த்திக் நரேன் நடிகர் அருண் விஜய்க்கு கால் செய்து மாஃபியா 2 படம் பண்ணலாமா என்று கேட்டுள்ளாராம். அதற்கு அருண் விஜய பார்க்கலாம் என சொல்லிவிட்டு போனை வைத்து விட்டதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள்.