மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தனியார் தோட்டமொன்றில் 15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞன் மஸ்கெலியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவசர ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரியும் 26 வயதுடைய மொனராகலை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரே சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன் தற்போது சிறுமி 8 மாத கர்ப்பிணியாகவும் உள்ளார்.
இது குறித்து அவரது தந்தை நேற்று மாலை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன்
அவரை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்