Home Local news மலேரியாவை பரப்பக்கூடிய ஒருவகை நுளம்பு யாழ்ப்பாண நகரப்பகுதியில் கண்டுபிடிப்பு

மலேரியாவை பரப்பக்கூடிய ஒருவகை நுளம்பு யாழ்ப்பாண நகரப்பகுதியில் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாண நகரப் பகுதியில் அனோபிலிஸ் டிபென்சி எனும் மலேரியா அல்லது நகரப்புற மலேரியாவைப் பரப்பக்கூடிய ஒருவகை நுளம்பு யாழ்ப்பாண நகரப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை எங்களுக்கு மிகவும் ஒரு அபாயகரமானது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். நகரில் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நுளம்பு மூலம் எமது பகுதியிலும் மலேரியா பரவக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுகிறது.

மலேரியாவை பரப்பக்கூடிய நுளம்புகள் எங்களுடைய பிரதேசங்களில் தாராளமாக இருக்கின்றன. எனவே வெளிநாட்டிலிருந்து ஒருவர் இந்த மலேரியா தோற்றத்துடன் இங்கே வந்தால் உள்ளூரிலே இந்த நோய் பரவக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் எவ்வாறு இந்நோயினை கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். குறிப்பாக மலேரியா உள்ள நாடுகளுக்குச் செல்வோர் இந்த விடயம் தொடர்பில் அவதானமாகச் செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகுடும்பஸ்தர் ஒருவரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
Next articleகொழும்பில் கொல்லப்பட்ட மாணவன்; 6 பேர் அதிரடியாக கைது!