Home கிசு கிசு மரணத்தில் முடிந்த கள்ளக் காதல்

மரணத்தில் முடிந்த கள்ளக் காதல்

கிரிபத்கொடை பகுதியில் நேற்றிரவு (07) கள்ள காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

முந்தலம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் நேற்றிரவு கிரிபத்கொட பகுதியில் வைத்து குறித்த பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார்.

சந்தேக நபர் பின்னர் அருகிலுள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் ஏறி, மற்றொரு கட்டிடத்தின் கூரையில் அதன் வழியாக நடந்து செல்லும் போது உயர் மின்னழுத்த மின் கம்பியில் தொங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கத்தியால் குத்துக்கு இலக்கான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகதீஜாவின் திருமணத்திற்குப் பிறகு ரஹ்மான், குடும்பத்தினர் ஸ்டாலினைச் சந்தித்தனர் !! புகைப்படம் வைரல்
Next articleமலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் ஹரீஷ் பெராடி விலகல்