கோவிட் தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்த பெண்ணொருவர் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
குறித்த பெண் மூச்சு விடுவதில் சிரமத்துடன் தன்னுடைய மோசமான உடல் நிலை தொடர்பில் அண்மையில் சமூக வலைத்தளம் ஊடாக காணொளியொன்றை வெளியிட்டிருந்தார்.
இதில் கோவிட் தொற்று காரணமாக தான் மூச்சு விடுவதற்கு பெரும் சிரமப்படுவதாகவும், தான் மோசமான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் .
இந்த நிலையில் தற்போது குறித்த பெண் வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களின் கடும் முயற்சியால் உயிர் தப்பியுள்ள நிலையில், இதற்கு தனது நன்றிகளை உரியவர்களுக்கு தெரிவித்துள்ளதுடன், அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.