மன்னார் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் காற்றாலையில் இருந்து கேபிள் கம்பிகளை திருடிய 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலை மன்னார் பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு இடையில் காற்றாலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த சந்தேக நபர்களால் அங்கு நிர்மாணப் பணிகளுக்காக கொண்டு வரப்பட்டிருந்த 340 மீற்றர் கேபிள் கம்பிகள் இவ்வாறு திருடப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (10) மன்னார் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.