மன்னார் பொலிஸ் பிரிவின் மூன்று இடங்களில் உள்ள மன்னார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை அடையாளம் தெரியாதோரினால் குறித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மன்னார் வயல் வீதி பகுதியில் உள்ள இரு சிற்றாலயங்கள் மீதும், மன்னார் – பள்ளிமுனை பிரதான வீதியில் உள்ள சிற்றாலயம் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் jaffna தெரிவித்தார்.
இதேநேரம் கடந்த இரண்டு நாட்களிலும் மூன்று சிற்றாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதன்படி, மூன்று தினங்களில் 6 கத்தோலிக்க சிற்றாலயங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.