தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் நாளை மறுநாள் உலகமெங்கும் கோலாகலமாக வெளியாக உள்ளது. இப்படம் தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நெல்சன் மற்றும் படக்குழு பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். அதே போல நடிகர் விஜய் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டார். அதில் விஜயிடம் இயக்குனர் நெல்சனே பல்வேறு கேள்விகளை கேட்டு கொண்டிருந்தார்.
அப்போது மனம் விட்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். விஜய் எப்போதும், இசை வெளியீட்டுவிழாவில் ஓர் குட்டி கதை கூறுவது வழக்கம். அது பெரும்பாலும் புதியதாகவே இருக்கும். கருத்து பழமையானதாக இருந்தாலும், அதனை புது கதைக்குள் சொல்வார்.
ஆனால், நேற்று ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில், நெல்சன் குட்டி கதை விஜயிடம் கேட்ட போது, அவர் புல்லாங்குழல், கால்பந்து என பழைய கதையை கூறினார். இதனை கேட்ட இணையவாசிகள் , இதனை பல முறை கேட்டாயிற்கு, புதியதாக விஜய் ஏதேனும் கதை கூறுவார் என நினைத்திருக்கையில் மீண்டும் மீண்டும் கேட்ட பழைய கதை கூறிவிட்டாரே என இணையவாசிகள் புலம்பி வருகின்றனர்.