பதுளை போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதிகாரியொருவர் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்று பொதுமக்களிடம் சிக்கியுள்ளார்.
மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் தட்டுத்தடுமாறி சென்று விபத்தை ஏற்படுத்த முயன்ற போது பொதுமக்களினால் அந்த அதிகாரி பிடிக்கப்பட்டார்.
இதன்போது சார் என்று பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்க முயற்சித்தபோதும், பொதுமக்கள் அந்த அதிகாரியை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த அதிகாரி, பொதுமக்கள் பொலிஸ் நிலையும் செல்லும் போது கீழ்த்தரமாக நடத்துவதாகவும், இதனால் இவ்வாறான அதிகாரிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படக்கூடாது என்றும் கூறி, பொதுமக்கள் குறித்த அதிகாரியை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.