மாவனெல்ல, தெவனகல பிரதேசத்தில் மண்சரிவில் சிக்கி காணாமல்போயிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற மண்சரிவினால் வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தாய், தந்தை மற்றும் அவர்களின் 23 வயது மகள், 29 வயது மகன் என 4 பேர் மண்சரிவில் புதையுண்டு காணாமல்போயிருந்தனர்.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளில் 23 வயதான மகளின் சடலம் முதலில் மீட்கப்பட்டது.
பின்னர், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளையடுத்து தந்தை, தாய் ஆகியோரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
57 வயதான தந்தை மற்றும் தாயின் சடலங்கேளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மாவனெல்ல தெவனகல மண்சரிவில் சிக்கி காணாமல்போன மகனை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்,
இறுதியாக 29 வயது மகனின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக அனர்ந்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.