Home Tamil News மணிவண்ணன் கைது கனடா நாட்டின் ரொரண்டோ மேயர் ஜோன் டோரி கண்டனம்.

மணிவண்ணன் கைது கனடா நாட்டின் ரொரண்டோ மேயர் ஜோன் டோரி கண்டனம்.

யாழ் மாநகர மேயர் வி.மணிவண்ணன் கைது . கனடா – ரொரண்டோ(Toronto) நகர மேயர் ஜோன் டோரி மற்றும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோர் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசின் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

மணிவண்ணன் கைது கனடா நாட்டின் ரொரண்டோ மேயர் ஜோன் டோரி கண்டனம்.

தமிழர்களுக்கு எதிராக தொடரும் இவ்வாறான அநியாயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதற்கு அனைவரும் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும். தமிழ் சமூகத்துக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் எனவும் ரொரண்டோ மேயர் ஜோன் டோரி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி அவர்களும் யாழ் மாநகர முதல்வர் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகொழும்பு முல்லேரியா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம பதுங்குகுழி – சிக்கினார் முக்கிய புள்ளி
Next articleசங்கிலி திருடர்கள் வசமாக சிக்கினர்