Home Jaffna News மணிவண்ணனின் செயலை அறியாத் தவறாக கருதி மன்னிப்பு வழங்குங்கள் – ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ்...

மணிவண்ணனின் செயலை அறியாத் தவறாக கருதி மன்னிப்பு வழங்குங்கள் – ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட நகரின் சுத்தம் சுகாதார போக்குவரத்து உள்ளிட்டவற்றை கவனிக்க முதல்வரால் நியமிக்கப்பட்ட காவல் படை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டிருந்தார். டக்ளஸ் தேவானந்தா

இவ்விடயத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த பணியாளர்களை நியமித்தது அவர்களுக்கு சீருடை வழங்கியது தொடர்பான செயலை அறியாத் தவறாக கருதி மணிவண்ணனை விடுவித்து,

யாழ்ப்பாணம்  சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வவுனியா பயங்கரவாத விசாரணை பிணையில் நீதிவான் நீதிமன்றில் சுமந்திரன் கைது  டக்ளஸ் தேவானந்தா

மாநகரசபையின் செயற்பாடுகளை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஆவண செய்யுமாறு இன்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டிருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் நேற்று இரவு யாழ் பொலிஸ் நிலையம் அழைத்து விசாரிக்கப்பட்டிருந்த சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் வவுனியாவில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

நிலையில் இவ்விடயம் தொடர்பிலும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது

இந்நிலையில் இன்று இரவு மீண்டும் யாழ் மேல் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டிருந் நிலையில் அவரை விடுவித்து தருமாறு பல்வேறு தரப்பினரும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஉயிரிழந்ததாக கூறி, பிரேத அறைக்கு அனுப்பியவர் உயிருடன் : நீர்கொழும்பில் பரபரப்பு சம்பவம்
Next articleஇத்திக் குளத்தில் மூழ்கி காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!