மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் 76 பொலிசாரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போது இரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள்
மற்றும் பொலிஸ் விடுதியில் தங்கியிருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் உறவினர் அடங்கலாக மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய வளாகத்தில் மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினால் இன்று இவ் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சுகாதார வைத்தியதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் இதில் பங்கு கொண்டிருந்தனர்.