Home Tamil News மட்டக்களப்பில் 21 வயதுடைய இளைஞரொருவருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பில் 21 வயதுடைய இளைஞரொருவருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 21 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.நிஸ்வான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியை அவர்களது பெற்றோருக்கு தெரியாமல் ஞாயிற்றுக்கிழமை (11) சிறுமியின் வீட்டிற்கு அருகாமையிலுள்ள குறித்த இளைஞன்

கோவிலுக்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், குறித்த இளைஞர் நேற்று (12) கைது செய்யப்பட்டு

மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவரை எதிர்வரும் 27 ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமாங்குளத்தில் காணாமல் போன சிறுவனுக்கு நடந்த அமானுஷ்யம்
Next articleபுதுத்துவெட்டுவான் கிராமத்தில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்! இளைஞன் கைது